×

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு: கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சமரக் சிக்‌ஷா மாநில திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் அந்தந்த எஸ்எம்சிகள் மூலம் 100 Mbps வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பு கொடுக்க வேண்டும். இதற்காக ரூ.1500 செலவிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் சேவை வழங்கும் இணைய இணைப்பை அமைப்பதில் 100Mbps பிராட்பேண்ட் இணைப்பை பெறவேண்டும்.

அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேற்கூறிய இரண்டு வகைகளையும் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஒருங்கிணைந்த குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். சமக்ர சிக்‌ஷாவின் டிசி-ஐசிடிஐ தலைவராகவும், மாவட்ட புரோகிராமரும் இணைத்து குழு உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைப்பு தொடங்குவது தொடர்பாக தலைமை நிர்வாக அதிகாரிகளும், ஐசிடி குழுக்களுக்கும், பள்ளிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் உதிரி லேப்டாப்கள் இருந்தால் அவை உயர் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட வேண்டும். மேலும், அந்தந்த பள்ளிகளில் உள்ள லேப்டாப்களை சரிபார்க்க வேண்டும். அதன் பேரில் செயல்படாத லேப்டாப்களை ஒதுக்கிவிட்டு கணக்கிட வேண்டும். இந்த திட்டத்தில் எந்த குழப்பங்களும் வராமல் செய்து முடிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மாவட்ட அளவிலான ஐசிடி குழுவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் 38, மாவட்ட புரோகிராமர்கள் 28 எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர்கள் 75, எல் அண்டு டி பொறியாளர்கள் 76, தமிழ்நாடு பெல்லோஷிப்கள் 123 என மொத்தம் 340 பேர் இடம் பெற வேண்டும். இவ்வாறு மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு: கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,State Program Director ,Samarak ,Siksha ,District ,Education Officers ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...